உங்கள் இசையின் ரீங்காரத்தில் தோன்றும் அலைகள் ஓய்வதில்லை,
இசையின் எல்லையை நாடும் தங்களின் பயணங்கள் முடிவதில்லை,
ஓடோடி இளைப்பாற வீசியது உங்கள் இசையின் நாடோடி தென்றல்,
கிராமபோனில் இருந்து கணினி வரை மாறியும் கிராமத்து இசையை கேட்க தூண்டியது உங்கள் இசையின் மண் வாசனை,
இப்படி ஒரு இசை சிற்பியை படைக்க வேண்டும் என்று தோன்றியது பிரம்மாவின் யோசனை
சிவனே என்று அமைதி காக்கும் ஜீவன்களுக்கு நீங்கள் தந்தது திருவாசகம் சிம்போனி,
நாம் யார் என்றும் நாமே இல்லை என்றும் உணர்த்திய குரு ரமணருக்கு நீங்கள் இட்ட இசை மாலை ரமண மாலை,
ஆன்மாவை உணர்த்தி உருக வைத்த இசை ஒலி உங்கள் கீதாஞ்சலி,
தென்இந்திய ராகங்களுடன் மேற்கத்திய இசை காவியங்களை இணைத்து தந்த பட்டான
இசை தட்டு How to name it?,
கண்ணனின் புல்லாங்குழல் இந்த மன்னனின் இசை வடிவால் நம் காதுக்குள் நுழைந்த இசை வண்டு Nothing but wind,
இனி உங்கள் சாயலில் இசை அமைக்கும் திறன் யாருக்கு உண்டு?