Friday, January 21, 2011

மஹா கவி பாரதிக்கு என்னால் முடிந்த வந்தனம்


ஓ பாரதி! நீ கலைவாணியின் கவிதை ரதத்தின் சாரதி,
ஓ பாரதி! நின் தமிழால் வளர்ந்ததோர் புதிய அகராதி.
நின்னை யானை உதறி - கதறி அழுதோம் வேண்டி நெஞ்சுக்கு நீதி,
உமக்கு முறையானதோர் இறுதி மரியாதை கூட அளிக்காதோர் மனித ஜாதி!

நின்னை சரண் அடைந்தேன் என்ற நின் வரிகளில் சரண் புகுந்தேன்,
உன் போல் கவிதை வராமல் நான் என் தரம் தெரிந்தேன்,
இனி ஒரு பாரதி பிறக்குமாறு தவம் புரிந்தேன்,
இதனால் உலகிற்கு நலம் புரிந்தேன்.

அச்சமில்லை அச்சமில்லை என்ற நின் சொல்லை
முழங்கியதால் எனை விட்டது இவ்வுலகின் தொல்லை.
 நின் கவிதை வித்துக்களால் பாரதம் அடைந்தது விடுதலை,
எங்களுக்கோர்  வழிகாட்டி நின்  தொலை நோக்கு எல்லை. 

கோமாளி

 என் உழைப்பை சுரண்டி உன் புகழ் பாடும் அதிசயர்க்கு தாரை வார்க்கும் இறைவா. 'கடமையை செய், பலனை எதிர் பாராதே' என்ற நின் கூற்று எளியோரை க...